search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டைக்காடு பகவதி அம்மன்"

    சித்ரா பவுர்ணமியையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்வதால் இது பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களிலும், நடைபயணமாகவும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கடற்கரையில் கால்களை நனைத்து விட்டு கோவில் வளாகத்தில் உள்ள பொங்கலிடும் மண்டபத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

    நிகழ்ச்சியையொட்டி காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, மதியம் உச்சபூஜை, அன்னதானம், மாலையில் சாயரட்சை, தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெற்றது.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீனபரணி கொடைவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக்கொடை விழா கடந்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. அதன்பின் 19-ந் தேதி எட்டாம் கொடை விழா நடந்தது.

    இந்தநிலையில் மீனபரணி கொடைவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவருதல், மதியம் 12.30 மணிக்கு உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல் போன்றவை நடந்தது. நள்ளிரவில் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.

    ஒரு ஆண்டில் 3 முறை மட்டுமே நடக்கும், இந்த பூஜை மாசி திருவிழாவின் 6-ம் நாள், மீனபரணி கொடைவிழா, கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும். வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மீனபரணி கொடை விழாவையொட்டி பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலை சுற்றியும், அருகில் உள்ள தென்னந்தோப்புகளிலும் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாட்டை இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், மராமத்து பொறியாளர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீனபரணி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 12-ந் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

    தொடர்ந்து 19-ந் தேதி எட்டாம் கொடை விழா நடைபெற்றது. இதையடுத்து மீனபரணிக்கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 11 மணிக்கு 150 குடங்களில் சந்தன பவனி, நண்பகல் 12.15 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், நள்ளிரவு 1 மணியளவில் வலியபடுக்கை பூஜை ஆகியவை நடக்கிறது. வலியபடுக்கையின்போது அம்மனுக்கு மிகவும் பிடித்த கனி வகைகள், உணவு பதார்த்தங்கள் ஆகியவற்றை பெருமளவில் அம்மன் முன் படையலிட்டு வழிபாடு நடைபெறும்.

    இந்த வழிபாடு மாசிக்கொடையின் 6-ம் நாளன்றும், அம்மன் பிறந்த நட்சத்திரம் என கருதப்படும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டிற்கு 3 முறை மட்டும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வழிபாடு முக்கிய வழிபாடாக கருதப் படுகிறது. மீனபரணி கொடையை முன்னிட்டு கேரளா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்தது. அவர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. பெண்களின் சபரிமலை என்றும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் மாசி திருவிழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்கிடையே மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கேரள பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் மண்டைக்காடு கோவில் பரபரப்புடன் காட்சி அளித்தது. கேரள பெண்கள் அதிகமாக வந்திருந்ததை காண முடிந்தது.

    இதனையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து தீபாராதனையும், மதியம் சிறப்பு பூஜையும், அன்னதானமும், மாலையில் சாயரட்சையும், இரவில் அத்தாள பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக காலையில் ஏராளமான பெண்கள் கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், என்ஜினீயர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று கலசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா மார்ச் 3 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இதற்கிடையே கடந்த பல மாதங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிகள் தொடங்கியது. ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கோவில் சால கோபுரம், கொடிமரம், கருவறை மேற்கூரை, தேக்குமர சீலிங், நாகர் சன்னதி, பாட்டுச்சாவடி, முன்வாசல், மரக்கதவு மற்றும் சுற்றுச்சுவர் திருப்பணிகள் நடந்தது. திருப்பணிகள் நிறைவுப் பெற்றதையடுத்து கடந்த 2 நாட்களாக கலசாபிஷேக யாகசாலை பூஜைகள் நடந்தது.

    நேற்று காலையில் கலசாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சைதன்யானந்தஜீ மகராஜ், செங்கல்பட்டு திருவடி சூலம் பைரவர் ருத்ராலய பீடாதிபதி பைரவ சித்தாந்த சுவாமிகள், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா சுவாமிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதியம் அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலையில் புஷ்பாஞ்சலி, தீபாராதனை, இரவு ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடந்தது.
    மண்டைக்காடு கோவிலில் கலசாபிஷேக விழாவில் 2-ம் கால யாக சாலை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலசாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று பூத சுத்தி, பாபனா அபிஷேகம், ஆச்சார்ய உற்சவம் போன்றவை நடந்தது. நிகழ்ச்சியை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தொடங்கி வைத்தார்.

    கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மேலாளர் ஆறுமுகதரன், பொறியாளர் அய்யப்பன், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்று காலை 9 மணிக்கு சாத்தான்குளம் அகோர சிவம் பகவதி குருக்கள் தலைமையில் 2-ம் கால யாக சாலை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தீபாராதனை, தோரணபூஜை, காலை 9 மணிக்கு கலசாபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம், இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடக்கிறது. 
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலசாபிஷேக விழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் கலசாபிஷேக விழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி நேற்று அதிகாலை கணபதிஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, மாலை பகவதி சேவை குருதிபூஜை, சுமங்கலி பூஜை, இரவு ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலை 2-ம் யாகசாலை பூஜை, மதியம் தீபாராதனை, மாலை 5 மணிக்கு வடுக பைரவர் பூஜை, இரவு 7 மணிக்கு 3-ம் யாகசாலை பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4-ம் யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு கலசாபிஷேகம், பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி ஆகியனவும் நடக்கிறது.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கோவிலில் வருகிற 10-ந் தேதி கலசாபிஷேகம் நடத்த திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். எனவே, இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா வெகுவிமரிசையாக 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு மாசிக்கொடை விழா மார்ச் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணி நடந்து வருகிறது. அதாவது, ரூ.3 கோடியில் கோவில் கோபுரம், கொடிமரம், கருவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது.

    இந்த பணிகளை விரைவாக முடித்து கலசாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் கோவிலில் வருகிற 10-ந் தேதி கலசாபிஷேகம் நடத்த திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதனையொட்டி கலசாபிஷேக யாகசாலை பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வருகிற 10-ந் தேதி கலசாபிஷேக விழா நடத்தப்படவுள்ளது. இதனை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். மிகவும் பழமையான மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கலசாபிஷேகம் நடப்பது இது தான் முதல் முறை என்றனர்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், மதியம் சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. மாலையில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    விழாவில் நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலையில் 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது.

    மதியம் 12 மணிக்கு பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் கேரள மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து கலந்து கொண்டு பானைகளில் பொங்கலிட்டு அம்மனை வழி பட்டனர். பொங்கல் வழிபாட்டை வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம சைதன்யானந்தா மகாராஜ் தொடங்கி வைத்தார்.

    மதியம் உச்ச பூஜை, சிறப்பு அன்னதானம் போன்றவை நடந்தது.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு சமய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் ஆகியவை நடக்கிறது. 
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். அதுபோல், ஆவணி அஸ்வதி பொங்கல் விழா ஆண்டுதோறும் நடக்கிறது.

    இந்த ஆண்டு பொங்கல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், மதியம் சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், காலை 8 மணிக்கு பஜனை, 10 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 11.30 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் உச்ச பூஜை, அன்னதானம், இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது.

    1-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து பரிசு வழங்குதலும் நடக்கிறது. பொங்கல் விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் தேவி சேவா சங்கத்தினர் செய்துள்ளனர். 
    ×